St CEYLONCNEWS: மாகாண சபைத் தேர்தலை வெகுவிரைவில் நடாத்துவோம்! - அமைச்சர் ஜானக்க பண்டார தென்னகோன்

திங்கள், 14 டிசம்பர், 2020

மாகாண சபைத் தேர்தலை வெகுவிரைவில் நடாத்துவோம்! - அமைச்சர் ஜானக்க பண்டார தென்னகோன்


மாகாண சபைத் தேர்தலை அவசரமாக நடாத்துமாறு கோரி அமைச்சரவைப் பத்திரம் ஒன்றினை முன்வைக்கவுள்ளதாக அமைச்சர் ஜானக்க பண்டார தென்னகோன் குறிப்பிட்டார். 

மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அரசாங்க சேவை மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான ஜானக்க பண்டார தென்னகோன்

அவர்களின் தலைமையில் தம்புல்லையிலுள்ள அவரது வீட்டில் இடம்பெற்ற பெண்கள் சம்மேளனத்தின்போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 

'மூன்று வருடங்களுக்கும் மேலாக மாகாண சபைத் தேர்தல் நடைபெறாமல் இருக்கின்றது. கடந்த அரசாங்கத்தின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் தான் முன்வைத்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தார். பாராளுமன்றில் அமைச்சர் ஒருவர் முன்வைத்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்த முதலாவது நபராகவும் அவர் வரலாற்றில் இடம்பிடிக்கிறார். இலங்கை மூன்றாவது தடவையாக ஸூம் செயலி மூலம் அமைச்சரவைக் கூட்டத்தில் மாகாண சபைத் தேர்தலை நடாத்துமாறு கோரி அமைச்சரவைப் பத்திரமொன்றை நாளை முன்வைப்பேன். 

மாகாண சபைத் தேர்தலை அவசரமாக நடாத்துமாறு கோரி, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ,  பெசில் ராஜபக்ஷ ஆகியோர் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாகாண சபை உறுப்பினர்களுடன் நாங்கள் அலரி மாளிகையில் ஒன்றுகூடி பேச்சுவார்த்தை நடாத்தினோம். அந்தக் கூட்டத்தில் மாகாண சபைத் தேர்தலை அவசரமாக நடாத்துவது பற்றிக் கதைத்தோம். எனவே, நாங்கள் வெகுவிரைவில் மாகாண சபைத் தேர்தலை நடாத்துவோம். 

கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் நாங்கள் வெற்றி பெறுவதற்காக பெண்கள் பலவகையிலும் ஒத்துழைப்பு நல்கினார்கள். நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலிலும் நாங்கள் வெற்றிபெற பெண்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக