St CEYLONCNEWS: நாட்டின் பல பகுதிகளில் பிறை தென்பட்டும், ஜம்இய்யத்துல் உலமா மௌனம் சாதிப்பது ஏன்?

வியாழன், 14 ஜூன், 2018

நாட்டின் பல பகுதிகளில் பிறை தென்பட்டும், ஜம்இய்யத்துல் உலமா மௌனம் சாதிப்பது ஏன்?

இன்று (14) மாலைவேளை, நாட்டின் பல பகுதிகளில் பிறை தென்பட்டுள்ளது. பிறை கண்டவர்கள் அதனை உறுதிப்பட தெரிவித்துள்ளனர். அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு தாங்கள் கண்டதாகவே அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதுதொடர்பில் ஒலிக்கோப்பில், பலஹத்துரையைச் சேர்ந்த ஜௌஹர் என்பவர்,

“எனது பெயர் ஜௌஹர் ரஹ்மான் நான் பலஹத்துரையைச் சேர்ந்த ஐஏஆர் பொறியியலாளர். பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரி. நானும் என்னோடு சிலரும் பி.ப. 5 மணியிலிருந்து கடற்கரையில் நின்றோம். பி.ப. 6.40 - 6.48 இடைப்பட்ட நேரத்தில் தாங்கள் பிறையைக் கண்டோம். ”

“ மேகத்திற்கிடையில் பிறை மங்கலாகக் காணப்பட்டது. நாங்கள் அவ்வேளை எடுத்த படங்கள் எங்களிடம் உள்ளன. எங்களுடன் சேர்ந்து, ஊரைச் சேர்ந்த பலரும் பிறையைக் கண்டிருக்கிறார்கள்” இது வல்லாஹி. அல்லாஹ்வின் மீது சத்தியம்”

எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒரு ஒலிக்கோப்பில், பிறை கண்டவருடனான நேர்காணலில், அவரும் அல்லாஹ்வின் மீது சத்தியமாக நாங்கள் பிறையைக் கண்டோம் எனவும், தாங்கள் இதற்குப் பொறுப்புதாரிகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இவ்விடயங்களையேனும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கருத்திற் கொண்டு, கீழ் இணைக்கப்பட்டுள்ள படங்களில் உள்ள பெயர்களையுடையவர்களுடன் தொடர்புகொண்டு, நாளை பெருநாளா? இல்லையா? என்பதை உடனடியாக எதிர்பார்க்கையுடன் காத்திருக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கு அறிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக