St CEYLONCNEWS: கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக பாடசாலைகளுக்குப் பதில் விடுதிகளை பாவியுங்கள்!

வியாழன், 30 ஏப்ரல், 2020

கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக பாடசாலைகளுக்குப் பதில் விடுதிகளை பாவியுங்கள்!


வைத்திய கலாநிதி சிவமோகன் ஆலோசனை

நாட்டில் கொரோனா தொற்றால் படையினர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்  அவர்களுக்கான தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு பாடசாலைகளை பயன்டபடுத்த  தீர்மானித்துள்ள நிலையில்  வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் இந்த ஆலோசனையை
இன்று(30) காலை பத்து மணியளவில் அவரது வவுனியா அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வழங்கியிருந்தார்

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்
இன்று இந்த கொரோனா தொற்று பாரிய தாக்கத்தை நாட்டில் ஏற்படுத்தியுள்ளது .

வெலிசற கடற்படை முகாமில் ஒருவர் தடுத்து வைக்கப்பட்ட பொழுது அதன் தொடர்ச்சியாக குறுக்குத் தொற்றுமூலம்  233 முப்படையினரை  தொற்றிக் கொண்ட அபாயம் நிகழ்ந்தது.
 இப்பொழுது இதனை இந்த அரசு ஏற்றுக் கொள்கின்றது.

இராணுவத்தின் தனிமைப்படுத்தல் நிலையமாக எமது பிரதேச பாடசாலைகளை பாவிக்கும் பொழுது தமக்கும்  குறுக்குத்தொற்று  ஏற்பட்டு விடுமோ என்று மக்கள் அச்சப்படுகிறார்கள்.  அப் பாடசாலைகளில் பொதுமலசலகூடங்கள் மட்டும் இருப்பதால் குறுக்குத் தொற்று ஏற்படும் சந்தர்ப்பம் அதிகம் மிக  விரைவில் தேர்தலை நடத்த போகின்றோம் எனக் கூறிக்கொண்டிப்பவர்கள் யூன் 20 இல் இந்தப் பாடசாலைகளை மீண்டும தொற்று நீக்கம் செய்வது மிகவும் இலகுவான காரியமாக இருக்கப்போவதில்லை.
எனவே பாடசாலைகள் பொருத்தமற்றது.

அத்துடன் மாவட்டத்திற்கு மாவட்டம் மக்களை  செல்ல முடியாமல் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள் வவுனியாவில் இருப்பவர்கள் முல்லைத்தீவிற்கு போக முடியாது முல்லைத்தீவில்  இருப்பவர்கள்  வவுனியாவிற்கு வரமுடியாது என்று தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் போது இன்னுமொரு மாவட்டத்தில் இருந்து  சந்தேகத்திற்கு இடமானவர்களை எமது  மாவட்டங்களுக்கு கொண்டு வருவது எந்த அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு எனவே அது ஒரு தவறான முடிவாகவே காணப்படுகிறது .

அதனால் தனிமைப்படுத்தலுக்கான மாற்று ஒழுங்குகள் தேவை இந்த சந்தர்ப்பத்தில் தனிமைப்படுத்தலுக்கான குறுக்குத் தொற்றுக்கள் ஏற்படுத்தப்படாது பாதுகாக்கக் கூடிய ஒரே இடம்  நடசத்திர விடுதிகள் தான் அங்குதான்  அனைத்து வசதிகளும் உள்ளது  தனியான  குளியலறை உணவு தங்குமிடம் என்று சகல வசதிகளும் உள்ளது அவற்றைப் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது இன்று இந்த நட்சத்திர விடுதிகள் பாவனை அற்று கைவிடப்பட்டுள்ளது

அரசாங்கம் அதற்குரிய தங்குமிட நாள் வாடகையினை அந்த நிறுவனங்களுக்கு வழங்குமாக இருந்தால் அவர்களிடமிருந்து பெற முடியும் கிட்டத்தட்ட நாடு முழுவதும் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட விடுதி அறைகள் உள்ளது எனவே தனிமைப்படுத்தலுக்கு சிறந்த இடம் விடுதிகள்தான் .

தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் முடிந்த பின் விடுதிகளை தொற்று நீக்கம் செய்வதும் மிகவும் இலகுவானது அதனால் இரானுவத்தினரின் கொரோனா தனிமைப்டபடுத்தலுக்கு பாடசாலைகளை பாவிக்க முற்படுவதற்கு பதிலாக விடுதிகளை பாவிக்கலாம் என்பது என்னுடைய கருத்தாக உள்ளது என்று வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக