நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக அரசிற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
கொழும்பில் முஸ்லிம் குழுக்களை நேற்றுமுன்தினம் சந்தித்து மகிந்த பேச்சு நடத்தினார். சந்திப்பின் முடிவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரி விக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
அவர் மேலும் தெரிவித்ததாவது,
எந்தவொரு நபருக்கும் அச்சுறுத்தல், வலியினை ஏற்படுத்தாமல் அமைதியைக் கடைப்பிடிக்குமாறு சகல இன மக்களையும் கேட்டுக்கொள்கின்றேன். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையைக் கட்டுப்படுத்த அரசு சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும்.
அவசரகால நிலமையை இப்போதல்ல, சம்பவம் பெரியளவில் பரவுவதற்கு முன்னர் நடைமுறைப்படுத்திக் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். பிரச்சினை இந்தளவு வியாபித்துச் செல்லும்வரை அரசு பார்த்துக் கொண்டிருந்தமை யையிட்டுக் கவலை யடைகின்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக