St CEYLONCNEWS: அவசரகால சட்டத்தை அவசியமின்றி நீடிக்கக்கூடாது!

வெள்ளி, 9 மார்ச், 2018

அவசரகால சட்டத்தை அவசியமின்றி நீடிக்கக்கூடாது!

இலங்கையில் கொண்டு வரப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்தை அவசியமின்றி நீடிக்கக்கூடாது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கை அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
பன்னாட்டு மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியப் பணிப்பாளர் மீனாக் ஷ் கங்குலி இதனை வலியுறுத்தியுள்ளார்.

‘‘சிறுபான்மையினர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கு இலங்கை அரசு வழங்கிய உறுதிமொழிகளை உரிய வகையில் நிறைவேற்ற வேண்டும். இலங்கையில் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ள அவசரகால நிலமை ஊடாக, முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்தப்படுதல் அவசியமாகும். அதற்காகப் பாதுகாப்புப் படையினருக்குத் தொடர்ந்தும் அபரிமித அதிகாரங்களை வழங்கும் ஒன்றாக அது அமைந்து விடக்கூடாது’’- – என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக