மோதல்களுக்கு காரணமான பிரச்சினைகளைப் பேசித் தீர்க்குமாறு, கனேடிய அயலுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்ரிடியா பீரீலன்ட் தெரிவித்துள்ளார்.
கண்டிக் கலவரம் தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
கண்டிக் கலவரம் தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
இலங்கையில் தற்போது நிலவி வரும் சூழ்நிலை மிகவும் கவலையளிக்
கும் வகையில் உள்ளது. இதனால் மோதலில் ஈடுபடுபவர்கள் அமைதி காக்க வேண்டும். பேச்சு ஊடாகத் தீர்வு கண்டு இதற்கு ஒரு சுமூகமான முடிவை காணவேண்டும்.
இந்தச் சம்பவங்கள் குறித்துத் தவறான தகவல்கள் பரப்பப்படுவதால், அதற்கு முடிவு கட்டும் வகையில் இலங்கை அரசு எடுத்துள்ள நடவடிக்கையை வரவேற்கின்றேன் – – என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக