கடந்த சில தினங்களாக நாட்டின் பல பகுதிகளில் சில இனவாதக் குழுக்களால் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகளைக் கண்டித்து ஐக்கிய இராச்சியத்தின் லெஸ்டர் பிரதேசத்தில் வாழும் புலம்பெயர் இலங்கை முஸ்லிம்கள் தங்கள் சகோதர மக்கள் தாக்கப்படுவதை கண்டித்து பாரிய போராட்டம் ஒன்றினை தற்போது மேற்கொள்கின்றனர் .
இந்தப் போராட்டம் இன்று காலை 11 மணியளவில் ஆரம்பித்தது . இதில் ஆண்கள் பெண்கள் என்று அனைவரும் கொட்டும் மழையையும்
பொருட்படுத்தாமல் தங்களின் இரத்த உறவுகளுக்காக தங்களது இதயபூர்வமான ஆதரவை தெரிவித்து இப்போராட்டத்தை மேற்கொள்கின்றனர் .
பொருட்படுத்தாமல் தங்களின் இரத்த உறவுகளுக்காக தங்களது இதயபூர்வமான ஆதரவை தெரிவித்து இப்போராட்டத்தை மேற்கொள்கின்றனர் .
சர்வதேசம் எங்களுடைய இலங்கை முஸ்லிம்களை கண்டுகொள்ள வேண்டும் எனவும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர் .
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இலங்கை அரசு நாட்டிலுள்ள முஸ்லிம்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் , என்றும் முப்பது வருட கால கொடிய யுத்தத்திலிருந்து மீண்டுள்ள நாட்டை மூவின மக்களும் ஒற்றுமையாகவும் சுபிட்சத்துடனும் வாழ்வதன் மூலம் தான் நம் நாட்டை அபிவிருத்தியடையச் செய்யாலாம் என்றும் தெரிவித்தனர் .
நன்றி - ஜப்னா முஸ்லிம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக