St CEYLONCNEWS: தேசபந்து தெ. ஈஸ்வரன் அரங்கில் வகவ 46 வது கவியரங்கம்

வெள்ளி, 9 மார்ச், 2018

தேசபந்து தெ. ஈஸ்வரன் அரங்கில் வகவ 46 வது கவியரங்கம்



வலம்புரி கவிதா வட்டத்தின் 46 வது கவியரங்கு 01/3/2018 அன்று காலை கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில் நடைபெற்றது.       தேசபந்து  தெ.ஈஸ்வரன்     அரங்கில்  நடைபெற்ற நிகழ்வில் கொழும்பு விவேகானந்தா கல்லூரி அதிபர் ஆர்.  இராமையா சிறப்பதிதியாக கலந்து கொண்டார்.  நிகழ்வுகளுக்கு வகவ தலைவர் நஜ்முல் ஹுசைன் தலைமை தாங்கினார். செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் வரவேற்புரை வழங்க ஈழகணேஷ் நன்றியுரை வழங்கினார். 

நம்மை விட்டு மறைந்த கவிஞர் செழியன்   நினைவு கூரப்பட்டார். அவர் பற்றிய குறிப்புகளை கவிஞர் மேமன்கவி வழங்கினார். 

சிறப்பதிதியாக கலந்து கொண்ட கொழும்பு விவேகானந்தா கல்லூரி அதிபர் ஆர்.  இராமையா மறைந்த அறங்காவலர் தேசபந்து ஈஸ்வரன் பற்றி உரையாற்றினார். 

46 வது கவியரங்கம் கவிஞர்  எஸ். தனபாலன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கவிஞர்கள்  எம். பிரேம்ராஜ்  , ரவூப் ஹஸீர்,  பாணந்துறை எம்.பி.எம். நிஸ்வான்,  எம். ஏ.எம். ஆறுமுகம், எம். பாலகிருஷ்ணன், சுதர்ஸனி பொன்னையா,  வை. சுசீலா,    எம்.  பிரேம்ராஜ்,   கிண்ணியா அமீர் அலி,மிஹிந்தலை பாரிஸ்,      வெலிமடை ஜஹாங்கீர்,    அப்துல் லத்தீப்,   , எம். வஸீர்,  பொகவந்தலாவ ராஜிவ், மதியன்பன் மஜீத், எம்.எஸ். தாஜ்மஹான்,எம்.எல்.எம். அன்ஸார், கம்மல்துறை இக்பால், வெலிப்பன்னை அத்தாஸ்,    பாயிஸா ஹமீட்,  பேருவளை பரீஹா பாருக், முஹம்மத் அனஸ்,மேமன்கவி      ஆகியோர் கவிதை பாடினர். 

சிறப்பதிதியாக கலந்து கொண்டு ஆர். இராமையா அவர்கள் தனதுரையில் " உங்கள் அனைவரினதும் கனதியான கவிதைகளைக் கேட்டு நான் மெய்சிலிர்த்துப் போனேன்.  இவ்வாறான ஓர் அரங்கிற்கு என்னையும் அழைத்து இவற்றை ரசிக்க வைத்ததற்காக வகவத்திற்கு நன்றி பாராட்டுகிறேன்.
தெய்வநாயகம் பிள்ளை ஈஸ்வரன் ஐயா அவர்களை எமது கல்லூரியில் கல்வி பயிலும் ஐந்து மாணவர்களுக்கு வழங்கி வந்த புலமைப்பரிசில் சம்பந்தமாக அம் மாணவர்களை காண வந்த வேலையில்தான் நான் முதலில் கண்டேன்.  செல்வத்திலே குளித்த ஒருவரிடமிருந்த அடக்கத்தினை கண்டு நான் மலைத்துப் போனேன்.  ஓர் அற்புதமான மனிதராக ஐயா ஈஸ்வரனை நான் கண்டேன்.  வாரி வழங்கும் வள்ளலாக அவர் திகழ்ந்தார்.  எல்லா தர மனிதனுகளுடனும் அன்பாக ஏற்றத்தாழ்வின்றி பழகிய ஒருவர்.  வியாபாரத் துறையில் ஈடுபட்ட போதும் இலக்கியத்திலும் தன் பங்களிப்பினை வழங்கினார். சிறப்பான சிறுகதை எழுத்தாளர்.  அனைவரையும் வசீகரிக்கும் மேடைப் பேச்சாளர்.  ஆன்மீகத்தை நேசித்தவர். பல கோயில்களுக்கு உதவி வழங்கியவர். தன் குடும்பத்தை மிகுந்த ஒற்றுமையுடன் வழி நடாத்தியவர். எம் சமூகத்தின் அடையாளம் என தேசபந்து அறங்காவலர் தெய்வநாயகம்பிள்ளை ஈஸ்வரன் அவர்களை கூறலாம் " என்றார்.

நிகழ்வில் சத்திய எழுத்தாளர் எஸ். ஐ. நாகூர் கனி,  கலைவாதி கலீல்,  நாடக இயக்குனர் செல்வராஜ்,  எம். எஸ். எம். ஜின்னா, மலாய்கவி டிவங்சோ,ரி.என். இஸ்ரா போன்ற பலர் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக