அவசர கால சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டு குற்றம் நிருபி;க்கப்பட்டால் 20 வருடங்கள் சிறை அல்லது ஆயுட்காலம் தன்டனை வழங்கப்படும். அதே நேரம் வன்முறை தூண்டுபவர்கள் கைது செய்யப்டின் பினை வழங்கப்படமாட்டாது. . என பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில ; பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
இவ் ஊடக மாநாட்டில் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுனித் சந்தன, விமானப்படை பேச்சாளர் தினேஸ் பண்டார ஆகியோரும் கலந்து கொண்டனர் . பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தலைமையில் நேற்று (02.30)மணிக்கு நடைபெற்ற பாதுகாப்புக் சபைக் கூட்டத்தின்போது அவசரகால சட்டம் நேற்று விசேட வர்த்தமாணி மூலம் பிரசுரிக்கப்பட்டது. ; பிரகடனத்தின் பிரகாரம் - பொய்பிரச்சாரங்கள், சமூக வலைத்தளங்கள,; ஊடக நிறுவனங்கள் மூலம் இனவிரோத செய்திகளைப் பரப்புதல், சட்டவிரோத செயல்களில் ஈடுபடல், ஒன்றுகூடல், இனங்களுக்கு குரோதமான பேச்சுக்கள், கூட்டங்களில் உரையாற்றுதல் மக்களைத் தூண்டுதல், பொது மற்றும் தனிப்பட்ட சொத்துக்கள் ஆட்களுக்கு பங்கம் விளைவித்தல் கூட்டமாகச் சென்று இனங்களுக்கிடையே தாக்குதல் நடத்துதல் போன்ற குற்றங்களுக்கு 20 வருட சிறைத் தண்டனை வழங்கப்படும்.
அதி தீவிர குற்றம் விளைவித்தவருக்கு ஆயுட் கால தண்டனை வழங்கப்படும். அத்துடன் சந்தேக நபருக்கு பினையும் வழங்கப்படமாட்டாது. இவ்வாறனவர்களை கைது செய்வதற்கு முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் 24 மணித்தியாலத்திற்குள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு 14 நாட்கள் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்படுவார். இவ்வாறானவர்களை தடுத்து வைத்து பிரதிப்பொலிஸ் மா அதிபர் ஒருவரினால் விசாரிக்கப்படுவார். இந்த அவசரகாலச் சட்டம் இன்றில் இருந்து 7 நாட்களுக்கு அமுல்படுத்தப்படும்.
கைது செய்யப்படுவர் இனம், மதம், அரசியல் கட்சி என்ற பேதம்pல்லாமல் கைதாவார். இவ்வாறான குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவர்கள் சம்பந்தமாக அருகில் உள்ள பொலிஸ் நிலையம் அல்லது 119 பொலிஸ் தலைமைக் காரியாலயத்திற்கு தகவல்களை பொது மக்கள் தெரிவிக்கலாம்.
அம்பாறை , திகன சம்பவங்கள் பொலிஸ் மற்றும் முப்படையினரின் கட்டுப்பாட்டுக்குள்; கொண்டுவரப்பட்டுள்ளன. அம்பாறை ,திகன சம்பவங்கள் பற்றி சி.ஜ.டியினர் உரிய விசாரனைகளை அங்கு நேரடியாகச் சென்று விசாரனை செய்துவருகின்றனர். தற்பொழுது கண்டியில் 1000க்கும் மேற்பட்ட பொலிசார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஊடகவியலாளர் கேள்வி அம்பாறைச் சம்பவத்தின்போது 500 மீட்டர்ருக்கு அப்பால் பொலிஸ் நிலையம் இரானுவ முகாமிருந்தும் அங்கு கடமையை சரிவரச் செய்யவில்லையே என கேள்வி எழுப்பினர்
தற்பொழுது அங்கு விசாரனைகள் மேற்கொண்டுவருகின்றோம். சம்பந்தப்பட்டவர்களை சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவத்தார்
திகன சம்பவத்தின் போது பொலிஸ் முப்படைகள் பார்த்திருக்கத் தக்க வெளியில் இருந்து வந்து கடைகளை தாக்கும்போது அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களே என ஊடகவியளார் கேள்வியின்போது
அங்கு பொலிசார் படையினர் பாதுகாப்பளிக்க்பட்டாதாலேயே இந்த அளவுக்கு திகன கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவதுள்ளோம் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ; தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக