St CEYLONCNEWS: அமைச்சர் ரிசாத்தின் கோட்டையில் ஏற்பட்ட சரிவும், மு.கா அதிகாரிகளின் அசமந்தப்போக்கும்!

புதன், 14 பிப்ரவரி, 2018

அமைச்சர் ரிசாத்தின் கோட்டையில் ஏற்பட்ட சரிவும், மு.கா அதிகாரிகளின் அசமந்தப்போக்கும்!

அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களின் மக்கள் காங்கிரஸ் ஆளுகைகுட்பட்ட ஒரேயொரு சபையான மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச சபையினதும், வன்னி மாவட்டத்தினதும் தேர்தல் பெறுபேறுகள் எவ்வாறு அமைய இருக்கின்றது என்ற ஊகத்தினை தேர்தலுக்கு முன்பாக வெளியிட்டிருந்தேன்.
அந்த தகவல்களில் மு.கா செயல்பாட்டினை அதிகரிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவும், கட்சிக்கு அதிகரித்துள்ள மக்கள் ஆதரவினையும், அங்குள்ள மு.கா அதிகாரிகளின் அசமந்த போக்கினையும் சுட்டிக்காட்டியிருந்தேன்.
முசலி பிரதேச சபையின் பத்து வட்டாரங்களில் எட்டு முஸ்லிம்களுக்குரிய
வட்டாரங்கலாகும். அதில் ஐந்து வட்டாரங்களில் மு. காங்கிரசுக்கு அதிக சாதகம் உள்ளது என்றும், அதில் உள்ள அப்பாவி ஏழை மக்களின் வறுமை நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அமைச்சர் ரிசாத்தினால் விலைக்கு வாங்கப்படலாம் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.
எனது கள ஆய்வில் இருந்த உண்மைத் தன்மையை ஏற்றுக்கொள்ளாத சிலர் அதனை விமர்சனம் செய்திருந்தார்கள். ஆனால் மக்கள் காங்கிரஸ் காரர்கள் அதனை ஒரு தகவலாகக்கொண்டு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டார்கள். ஊகிக்கப்பட்டவைகள் அனைத்தும் நடந்தேறியுள்ளது.
அந்தவகையில் மு.காங்கிரசின் வடமாகானசபை உறுப்பினரின் பண்டாரவெளி வட்டாரம் மிகவும் பலயீனமாக இருந்தது. எனது தகவலைக்கொண்டு அவரது வட்டாரத்தில் செயல்பாட்டினை அதிகரிக்க செய்யாமல், தன்னை விமர்சிப்பதாகவே அவர் கருதினார். அதன் வெளிப்பாடுதான் பண்டாரவெளி வட்டாரத்தில் மு.கா படுதோல்வி அடைந்தது.
அதேபோல் பொற்கேணி வட்டாரத்தில் மு.காங்கிரசுக்கு அதிகமான சாதகம் இருந்தது. அது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாரூக்கின் வட்டாரமாகும். அவர் தேர்தல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டதாக தகவல்கள் இல்லை.  
இதிலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், இன்றைய மாகாணசபை உறுப்பினர் ஆகியோரின் செயல்பாடில்லாத தன்மைதான் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு சாதகத்தினை ஏற்படுத்திக்கொடுத்தது.  
அத்துடன் வேப்பங்குளம் வட்டாரம் வெற்றி பெறுவதற்குரிய வட்டாரமாகும். தனக்கு தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் தரவில்லை என்பதற்காக மு.கா போராளி ஒருவர் சுயட்சையாக களம் இறங்கினார். அதனால் மு.கா வாக்குகள் பிரிந்ததனால் மக்கள் காங்கிரசுக்கு அது சாதக தன்மையை தோற்றுவித்தது.
மு.காங்கிரசினால் வெற்றி கொள்ளப்பட்ட புதுவெளி, அகத்திமுறிப்பு ஆகிய வட்டாரங்கள் கடந்த தேர்தலில் கட்சிக்கு பாரிய சவாலாக இருந்த பிரதேசமாகும். இதில் அகத்திமுறிப்பு ஹுனைஸ் பாரூக் அவர்களின் வட்டாரமாகும்.
வெற்றிபெற்ற இரு வட்டாரங்களில் கட்சியின் பழையவர்களின் எதிர்ப்பினையும் மீறியே ஹுனைஸ் பாரூக் அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டார்கள்.
அத்துடன் சிலாவத்துறையில் மக்கள் காங்கிரஸ் சார்பாக வெற்றி பெற்றவர் மு.கா உறுப்பினர் குவைதிர்கான் அவர்களின் சகோதரராவர். இந்த வட்டாரத்தில் குவைதிர்கான் அவர்கள் மு.கா சார்பாக தேர்தலில் களம் இறக்கப்பட்டிருந்தால் தனது சகோதரரை வாபஸ் வாங்க செய்திருப்பார். சிலாவத்துறையை கைப்பெற்றி இருக்கலாம்.
இருந்தாலும் கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் மூவாயிரத்துக்கும் கூடுதலான வாக்குகள் வன்னி மாவட்டத்தில் மு.காங்கிரசுக்கு இந்த தேர்தலில் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த வாக்குகள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் வாக்குவங்கிகளின் சரிவை காட்டுகின்றது. இது எந்தவொரு வாழ்வாதாரமும், பணப்போதிகளும் வழங்காமல் மரச்சின்னத்தில் தனித்து போட்டியிட்டு பெற்ற வாக்குகளாகும்.  
எனவே மு.கா பழமைவாதிகள் சுயனமின்றி விட்டுக்கொடுப்புடன் செயல்பட்டிருந்தால் முசலி பிரதேச சபையினை முகவும் இலகுவாக கைப்பெற்றி இருக்கலாம் என்பதுதான் அங்குள்ள கட்சி போராளிகளின் கருத்தாகும்.  
- முஹம்மத் இக்பால்
சாய்ந்தமருது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக