St CEYLONCNEWS: அநீதி இழைக்கப்பட்ட சாய்ந்தமருது மக்களுக்கு முதலில் கிடைத்த வெற்றி!

சனி, 27 ஜனவரி, 2018

அநீதி இழைக்கப்பட்ட சாய்ந்தமருது மக்களுக்கு முதலில் கிடைத்த வெற்றி!

சாய்ந்தமருது மக்களுக்குச் செய்யப்பட்ட துரோகத்தனங்களில் ஒன்றுக்கு இன்று (27) இறைவன் உரிய நியாயத்தை வழங்கியுள்ளான். அநீதி இழைக்கப்பட்ட மக்கள் விடயத்தில் இறைவனின் கருணையும் அவனது தீர்ப்பும் நிச்சயம் கிடைக்கும்.

சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தை அரசியல் அழுத்தங்களாலும் எதேச்சதிகாரப் போக்கிலும்
கலைத்தவர்களுக்கும், கலைக்கச் செய்தவர்களுக்கும் இன்று ஏமாற்றமான நாள்தான். இறைவனின் இல்லமான பள்ளிவாசல்களுடன் விளையாடுவோருக்கு இந்த விடயம் ஒரு படிப்பினையாக அமையட்டும்.
சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாக இடைக்கால சபையைக் கலைத்து தற்காலிக சபை ஒன்றை நியமித்த வக்பு சபையினரது முகத்திலும் கரி பூசப்பட்ட நாள் இன்று. இதுதான் இறைவனின் தீர்ப்பு.
பழைய நிர்வாக சபை தொடர்ந்து இயங்கலாம் என்று இன்று வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பானது, “சதிகாரர்களுக்கு எல்லாம் சதிகாரன் அல்லாஹ்” என்பதனை பலருக்கு மீண்டும் ஞாபகமூட்டட்டும்.
சாய்ந்தமருது மக்களாகி எங்களது உரிமைக்கான எந்தப் போராட்டங்களும் யாருக்கும் அநீதியானது அல்ல என்பது இந்த தீர்ப்பின் மூலம் நிரூபிக்கப்படுகிறது.
இது போன்ற ஒரு வெற்றிச் செய்தியே இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி அதிகாலை எம்மை வந்தடையும்.
அதுவரை ஒற்றுமை என்ற கயிற்றைப் பற்றிப் பிடியுங்கள். தாங்கள் தோல்வியடைப் போகிறோம் என்ற அச்சத்தில் பலர் பிரச்சினைகளையும் பிரிவினைகளையும் உங்களுக்குள் ஏற்படுத்த முயற்சிப்பர். தவறான தகவல்களை பரப்பி உங்களைக் குழப்பவும் கூடும் இவர்கள் தொடர்பிலும் இவர்களின் செயற்பாடுகள் குறித்தும் அவதானமாகச் செயற்படுங்கள்.
மன உறுதியுடன் உங்கள் பணிகளைத் தொடருங்கள். உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் இறைவன் நிச்சயமாக எங்களுக்கு வெற்றியைத் தருவான்.
மேலும், சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் இடைநிறுத்தப்பட்ட நிர்வாகம் தொடர்ந்து இயங்குவதற்கான அனுமதி இன்று கிடைத்துள்ளது. இது தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாகத்தின் முக்கியஸ்தரான உஷா இக்பால் அவர்கள் எனக்குத் தெரிவித்தவற்றை அவரது குரலிலேயே இங்கு பதிவிடுகிறேன்.
இந்த வழக்கு தொடர்பில் திறம்பட வாதாடிய சட்டத்தரணி என்.எம். சஹீத் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் வக்பு சபையால் நியமிக்கப்பட்ட புதிய இடைக்கால நிர்வாக சபை உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்தக் கொள்கிறேன்.
ஏனெனில், அவர்கள் நமது ஊர் மக்களின் அபிலாஷைகளுக்கு எதிராகச் செயற்படக் கூடாது என்ற நோக்கில் தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளத் தயங்கியமையும் இந்த வழக்கு வெற்றி பெறக் காரமணாக இருந்தது,
அத்துடன் வக்பு சபையால் நியமிக்கப்பட்ட புதிய இடைக்கால நிர்வாக சபையின் தலைவரான சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஹனீபா அவர்கள் வழங்கிய வாக்குமூலம் மிக வலிமையானதாக அமைந்திருந்தது. எமது வெற்றிக்கு அவரது வாக்குமூலமே கனதியைக் கொடுத்தது. அவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக