உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ்
கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்படுகின்ற
அரச தொலைக்காட்சிக் கலை விருது விழா -2018
கலைஞர்களை கௌரவிக்கும் அதேவேளை அவர்களுக்கு அரச தொலைக்காட்சி கலை விருது விழாவின் போது விருதுகள் வழங்கி வைக்கப்படவுள்ளன.
1. தொலைக்காட்சி நாடகம் (தொடர்கள்)
2017 ஆம் ஆண்டில் ஒளிப்பரப்பட்ட தொடர் நாடகங்களிலிருந்து
- சிறந்த நாடகம்
- சிறந்த இயக்குனர்
- சிறந்த நடிகர்
- சிறந்த நடிகை
- சிறந்த துணை நடிகர்
- சிறந்த துணை நடிகை
- சிறந்த திரைவசனம்
- சிறந்த கலை இயக்குனர்
- சிறந்த ஒப்பனையாளர்
- சிறந்த கமரா இயக்குனர்
- சிறந்த ஓருங்கிணைப்பாளர்
- சிறந்த இசையமைப்பாளர்
- சிறந்த நாடகப் பாடல் (அ). பாடல் வரிகள் (ஆ). பாடல் மெட்டு (இ). பாடகர்)
- சிறந்த ஒலிப்பதிவு திட்டமிடல்
ஆகிய பிரிவுகளுக்கு விருதுகள் வழங்கப்படுவதுடன், இதற்கு அப்பால் நடுவர்களின் விசேட விருதுகள் சிறந்த குழந்தை நடிகர், நடிகை / சிறந்த ஆடை அலங்காரம் விசேட காட்சி பிரயோகம் ஆகிய மேற்குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகளில் சிறப்பம்சம் காணப்பட்டால் விருது வழங்கப்படும்.
போட்டிக்கு சமர்ப்பிக்கப்படும் நாடகம் 100 அங்கங்களுக்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும்)
2. தொலைக்காட்சி நாடகம் (ஓர் அங்கம்)
3. தொலைக்காட்சி விவரண நாடகம் (Docu-Drama)
4. தொலைக்காட்சி சிறுவர் நாடகம்
5. தொலைக்காட்சி திரைப்படம்
6. தொலைக்காட்சி சஞ்சிகை நிகழ்ச்சி
7. தொலைக்காட்சி கலாசார நிகழ்ச்சி
8. தொலைக்காட்சி இசையாக்கல் நிகழ்ச்சி
9. தொலைக்காட்சி பாடல் காட்சி படைப்பாக்கம்
10. தொலைக்காட்சி சிறுவர் நிகழ்ச்சி
11. பின்னணி குரல் வழங்கல் தொலைக்காட்சி நிகழ்ச்சி
12. தொலைக்காட்சி அனிமேசன் தயாரிப்பு (Animation)
13. தொலைக்காட்சி மல்டி கமரா நிகழ்ச்சித் தயாரிப்புக்கள் (சிறந்த அரங்க அமைப்பு / சிறந்த ஒளியமைப்பு, சிறந்த காட்சிக் கலப்பு / சிறந்த ஒலி சேர்க்கை / சிறந்த ஒப்பனை ஆகியன இதன்போது கவனிக்கப்படும்)
14. தொலைக்காட்சி இடை நிரப்பு நிகழ்ச்சி (Filler)
15. மக்கள் சேவைக்கான சமூக பொறுப்புமிக்கதான விளம்பரங்கள் (Public Service / Commercial Advertisement)
16. தொலைக்காட்சி ஊடகம் தொடர்பாக வெளியிடப்பட்ட நூல் (2017ஆம் ஆண்டில் முதற்பதிப்பாக இருத்தல் வேண்டும்)
மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பப்படிவங்களை கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் அல்லது கீழ்க்காணும் முகவரிக்கு முத்திரை ஒட்டப்பட்ட கடித உறை அனுப்புவதன் மூலமும் பெற்றுக்கொள்ளலாம். மேலும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் www.culturaldept.gov.lk எனும் இணையத்தள முகவரியிலும் விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். கடித உறையில் இடது பக்க மேல் மூலையில் “அரச தொலைக்காட்சிக் கலை விருது விழா 2018 எனவும் மற்றும் போட்டிக்கென சமர்ப்பிக்கப்படும் போட்டிப் பிரிவு” என்பவற்றையும் குறிப்பிடவும். DATA Format மூலம் அனுப்பப்படும் இறுவெட்டுகள் நிராகரிக்கப்படுவதுடன், DVD Format மூலம் மாத்திரமே தயாரிப்புக்கள் சமர்ப்பிக்கப்படவேண்டும். ஒவ்வொரு பிரிவுக்கும் தனித் தனியாக DVD மற்றும் விண்ணப்பங்கள் அனுப்புதல் வேண்டும். மேற்குறிப்பிடப்பட்ட முறையில் சமர்ப்பிக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தபால் மூலம் அல்லது நேரடியாக விண்ணப்பங்களை கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் சமர்ப்பிக்க முடியும். போட்டிக்கு சமர்ப்பிக்கப்பட்ட DVDக்கள் மீண்டும் திருப்பி வழங்கப்படமாட்டாது. விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளும் இறுதித் தினம் 2018 மார்ச் மாதம் 31 ஆம் திகதி பி.ப. 4.00 மணியுடன் முடிவடையும். விருதுக்கான நடுவர்களின் முடிவே இறுதியானதாகும்.
முகவரி: பணிப்பாளர், கலாசார அலுவல்கள் திணைக்களம், 8ஆம் மாடி, செத்சிறிபாய, பத்தரமுல்லை.
தொலைபேசி இலக்கம் : 011-2 882534 / 011-2872031
தொலைநகல் : 011-2866732
மின்னஞ்சல் : staac2018@gmail.com
குறிப்பு: 2017ம் ஆண்டில் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்குள் உள்நாட்டு தொலைக்காட்சிகளில் முதன் முறையாக ஒளிபரப்பப்பட்ட படைப்புக்கள் மாத்திரம் விருதுகளுக்காக பரிசீலிக்கப்படும்.
பணிப்பாளர்
கலாசார அலுவல்கள் திணைக்களம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக