நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக வடக்கில் மன்னார் மாவட்டம் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது. மன்னார் மாவட்டம் முழுவதுமாக 21,754 குடும்பங்களைச் சேர்ந்த 75,199 பேர் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
நாட்டில் பல பகுதிகளில் தற்போது வெயில் அதிகரித்துள்ளது. அந்தப் பிரதேசங்கள் வறட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்தில் மன்னார் மாவட்டம் தற்போது கடும் வறட்சிக்கு உள்ளாகியுள்
ளது.
மன்னார் நகரப்பகுதியை அண்டியுள்ள மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மன்னார் இடர் முகாமைத்துவப் பிரிவினர் தெரிவித்தனர். மன்னார் பிரதேச செயலாளர் பிரவுக்குட்பட்ட பகுதியில் 4ஆயிரத்து 448 குடும்பங்களும், நானாட்டனில் ஆயிரத்து 480 குடும்பங்களும், முசலியில் 3,584 குடும்பங்களும், மாந்தையில் 5,211குடும்பங்களும், மடுவில் 431 குடும்பங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.
இவர்களுக்கான குடிதண்ணீர் வசதிகளை உடனுக்குடன் மாவட்டச் செயலகத்தின் பணிப்பில் இடர் முகா மைத்துவப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். வறட்சி மேலும் அதிகமாகும் பட்சத்தில் அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன எனவும் அனைத்துக்கும் தயாராகவே உள்ளதாகவும் மன்னார் இடர் முகாமைத்துவப் பிரிவினர் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக