St CEYLONCNEWS: சிங்கள இளைஞர்கள் ஏன் புலம்பெயர் தமிழர்களுக்குப் பயப்பட வேண்டும்?

வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

சிங்கள இளைஞர்கள் ஏன் புலம்பெயர் தமிழர்களுக்குப் பயப்பட வேண்டும்?

புலிகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்த பிரியங்க பிரனாந்து....!

“எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகள் “பிரபாகரனே எங்கள் தலைவர்” என்று கோசமெலுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது, நான் என் விரல்களை கழுத்தின்மேல் வைத்து அவர்களிடம் “எல்லாம் முடிவடைந்து விட்டதே” என்று கூறினேன் என பிரித்தானியா தூதரகப் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பிரனாந்து குறிப்பிட்டார்.

 பெப்ரவரி 04 ஆம் திகதி இடம்பெற்ற சுதந்திர தினத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எல்.ரீ.ரீ.ஈ ஆதரவாளர்களை பிரிகேடியர் பிரியங்க பிரனாந்து அச்சுறுத்துகின்ற
காணொளி தொடர்பில் இலங்கை இராணுவப்படைக்கெதிராக மாபெரும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதுடன், அதுதொடர்பில் அவரைப் பணிநீக்கம் செய்வதற்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானம் எடுத்தது.

இதுதொடர்பில் நேற்று முன்தினம் (07) நண்பகல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரிகேடியர் பிரியங்க பிரனாந்துவை தொலைபேசியில் தொடர்புகொண்டு, உங்களை மீண்டும் பணியில் அமர்த்தியுள்ளோம் எனவும், மேலும் பிரச்சினைகள் ஏற்படுத்தாமல் இருக்குமாறும் கூறியுள்ளதோடு, அந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாகவும் விசாரித்துள்ளார்.

இதுதொடர்பில் ஜனாதிபதியின் கட்டளையின்பேரில் மீண்டும் பிரிகேடியர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.  மேலும்  அவருக்கு எதிராக இராணுவத்திலிருந்தோ வேறெதேனும் நிறுவனங்களிலிருந்தோ எந்தவொரு தலையீடும் ஏற்படாது என, இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

பணிநீக்கம் செய்யப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பிரனாந்துவுக்கு எதிராக, வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் என்பன மேற்கொண்ட பரிசீலனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலையீட்டினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இடம்பெற்ற இவ்விடயம் தொடர்பில் பிரிகேடியர் பிரியங்க பிரனாந்து மேலும் குறிப்பிடுகையில்,

“ பிரித்தானிய - இலங்கைத் தூதரகத்தின் அழைப்பின்பேரில், சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் இருநூறிற்கும்  மேற்பட்டோர் ஒன்றுகூடியிருந்தனர். நான் இதுதொடர்பில் ஏலவே, புலனாய்வுத் துறையினருக்கு தகவல் பரிமாற்றம் செய்திருந்தேன். அதற்கேற்ப, தூதரகப் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைளில் ஈடுபட்டிருந்தனர்.

நாங்கள் சுதந்திர தின நிகழ்வுகள் முடிவடைந்ததும், ஆர்ப்பாட்டக்காரர்கள் இருப்பதனால், உள்ளிருந்த தமிழ் மக்களின் பாதுகாப்புத் தொடர்பில் கவனம் செலுத்தினோம். அவர்கள் பாதுகாப்புத் தொடர்பில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டனர்.  அவர்கள் வெளியே போவதற்குப் பயப்பட்டபோது, அவர்கள் பின்கதவினால் செல்வதற்கு  ஏற்பாடு செய்தோம். சிங்கள இளைஞர்கள், ஏன் அவர்களுக்கு நாங்கள் பயப்பட வேண்டும் எனக்கூறிக் கொண்டு முன் கதவினால் சென்றனர்.

இங்கு எவ்வித இனவாதமும் இல்லை. இலங்கையின் சுதந்திரத்தைக் கொண்டாடுங்கள் என நான் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கூறி, ஜனாதிபதி அனுப்பிவைத்திருந்த சுதந்திர தினச் செய்தியை அவர்களிடம் கொடுத்தேன். ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவன் முன்னாள் தலைவர்களில் ஒருவனாக இருக்க வேண்டும். அந்தச் செய்தியைப் பறித்து இழுத்து தீயிட்டான். அவனைத் தூதரப் பொலிஸார் கைது செய்தனர்.

அதனால் பதற்றமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தூதரக அலுவலகத்திற்கு அண்மையில் ஓடிவந்தனர். நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த அனைவரினதும் பாதுகாப்புப் பொறுப்பு எனக்குச் சாட்டப்பட்டிருந்தது. சீருடை அணிந்துகொண்டு, அவர்களுக்கு எதிராக என்னால் செயற்பட முடியாது.

“பிரபாகரன் அவர் எங்கள் ஹீரோ” என்று புலி ஆதரவாளர்கள் கூக்குரலிட்டதனால்தான் நான் அவர்களிடம், எல்லாம் முடிவடைந்து விட்டதே என சத்தமிட்டுச் சொன்னேன்.

“தமிழ் ஈழம் அவர் லேண்ட்” என்று அவர்கள் சத்தமிடும்போது, “திஸ் ஈஸ் யுவர் லேண்ட்” என்று எல்லோருக்கும் காணும்படியாக நான் இலங்கைக் கொடியைக் காண்பித்தேன்.

நான் ஒருமுறை விரலால் காட்டிய குறிப்பை அவர்கள் பலமுறை காட்டுவதுபோல் காணொளி தயாரித்து சர்வதேசத்திற்குப் பகிர்ந்துள்ளார்கள். இதனை எல்.ரீ.ரீ.ஈ ஆதவு ஊடகமொன்று செய்துள்ளது. என்றாலும்,  வடக்கிலும் வன்னியிலும் பிரித்தானியாவிலும் தமிழர்களுக்காக நான் எந்த அளவு சேவை செய்துள்ளேன் என்பதை தமிழர்கள் நன்கு அறிவார்கள்.

நான் சீருடையைக் களைந்து, ஆர்ப்பாட்டக்காரர்களிடம் சென்றும் அவர்களிடம், நீங்கள் இலங்கைக்குச் செல்லாமல் இலங்கையில் நடப்பவை ஏது என்று அறியாமல் வீணாகக் குற்றம் சுமத்த வேண்டாம் என்று கூறினேன். நீங்கள் இலங்கைக்குச் சென்று சமாதான முன்னெடுப்புக்கள் பற்றிப் பாருங்கள் என்றும் கூறினேன்.

நான் அச்சமயம் இலங்கையன் ஒருவனாகவே செயற்பட்டேன். அதுதொடர்பில் நான் பெருமிதமடைகிறேன். “தனக்கு முன்னர் நாடு” என்று நான் டீ.எஸ். சேனாநாயக்க வித்தியாலயத்தில் கற்கும்போது பெற்ற முன்மாதிரிக்கேற்பவே என்றும் செயற்படுகிறேன்... ” எனவும் பிரிகேடியர் பிரியங்க பிரனாந்து தெரிவித்துள்ளார்.

நன்றி - ரிவிர
தமிழில் - கலைமகன் பைரூஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக