St CEYLONCNEWS: ஜனாதிபதி அவசரமாக பதவி விலக வேண்டும்! - டில்வின்

சனி, 27 ஜனவரி, 2018

ஜனாதிபதி அவசரமாக பதவி விலக வேண்டும்! - டில்வின்

சென்ற மூன்று ஆண்டுகளிலும் நாட்டின் பொருளாதாரம் சரியானதொரு வளர்ச்சியில்லை... அதனால்  ஜனாதிபதி, தனது பதவியிலிருந்து அவசரமாக இராஜினாமாச் செய்துகொள்ள வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிடுகிறது.
ஜேவிபியின் செயலாளர் நாயகம் டில்வின் சில்வா இதுதொடர்பில் குறிப்பிடும்போது, சென்ற மூன்று ஆண்டுகளிலும் ஜனாதிபதியே அமைச்சரவையின் தலைவராகச் செயற்பட்டார் என்று குறிப்பிடுகிறார்.


மேலும், அமைச்சரவை உறுப்பினர்களைத் தெரிவு செய்ததும் ஜனாதிபதியே. அதனால் அமைச்சரவைத ்தீர்மானங்கள் பற்றி ஜனாதிபதிக்கு நன்கு தெரியும்.
அதனால், தற்போதைய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் பற்றி ஜனாதிபதி கட்டாயம் பதிலளித்தேயாக வேண்டும் எனவும், தேர்தல் மேடைகளில் தான் புகழீட்டுவதற்காக என்னதான் சொன்னாலும் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும், ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவுமே ஆட்சி செய்தனர் எனவும் அவர் தெளிவுறுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக