St CEYLONCNEWS: அரச ஊழியர்களால் அரசுக்குப் பெரும் தலையிடி!

சனி, 27 ஜனவரி, 2018

அரச ஊழியர்களால் அரசுக்குப் பெரும் தலையிடி!

ஒன்பதாவது தடவையாகவும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள, யாழ்ப்பாண சர்வதேச வியாபாரக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாணம் நூலகத்தில் இடம்பெற்றது.
அமைச்சர் தயா கமகே, அமைச்சர் சஷிகலா மகேஷ்வரன், வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஷ்வரன், அரச ஊழியர்கள் மற்றும்
இந்திய இராதந்திரிர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த வியாபாரக் கண்காட்சி, யாழ்ப்பாணம் பொதுமக்கள் விளையாட்டுத்திடலில் நடைபெறவுள்ளது.
அங்கு அவர் உரையாற்றுகையில், இந்த வியாபாரக் கண்காட்சியானது வடக்கு உற்பத்தியாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் நல்லதொரு சந்தர்ப்பமாகும் எனக் குறிப்பிட்டார்.
இந்திய உற்பத்தியாளர்கள் 70 பேரும் அந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அவர்களது உற்பத்திகளைப் பார்வையிடுவதனூடாக வடக்கிலும் உற்பத்திகளை மேற்கொள்வது தொடர்பிலான அறிவினைப் பெற்றுக் கொள்ளவியலும் என்றும் குறிப்பிட்டார். 
அதற்குத் தேவையான தொழிநுட்ப அறிவுகளையும், முதலீடுகளையும் இந்திய உற்பத்தியாளர்களிடம் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார். 
வடக்கிலுள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காக ஆவன செய்வது தொடர்பில் தனது பாராட்டுதலைத் தெரிவித்த அமைச்சர், யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களினதும் அபிவிருத்தி தொடர்பில், பல திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 
அதற்கு அரசாங்கத்தின் முன்னெடுப்பு மட்டுமன்றி, அரச ஊழியர்களும் தங்களாலான பங்களிப்புக்களை முன்னெடுக்க வேண்டும் என்றும், அதற்காக தனியாரின் பங்களிப்பினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெளிவுறுத்தினார்.
50 இலட்சம் டீஈஜேஸீ மாங்கன்றுகள் பகிர்ந்தளித்தல், கருவா, மிளகு மற்றும் மஞ்சள் போன்ற உற்பத்திகளுக்கு சந்தையை ஏற்படுத்திக் கொடுத்தல், மீன் பிடித்தொழில் வளர்ச்சிக்காக உதவுதல் போன்றனவும் அதில் உள்ளடங்கும் எனவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், இந்திய சனத்தொகையில் ஒவ்வொரு ஆயிரத்தில் ஒருவருக்கும் ஓர் அரச உத்தியோகத்தர் உள்ளனர். இலங்கையில் அரச ஊழியர்களின் தொகை முழுச் சனத்தொகையில் ஐந்திற்கு ஒன்று என்ற அளவில் இருப்பதனால் அரசாங்கத்திற்குப் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளது.
சென்ற ஆட்சிக் காலத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்ட 10 இலட்சமும் உள்ளடங்குகின்றது என அவர் மேலும் தெளிவுறுத்தினார். இந்தியா சுதந்திரம் அடையும்போது அந்நாடு பிளவுபட்டு வெவ்வேறாகியது எனவும், இலங்கை ஒரே நாடாக சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டது எனவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக