St CEYLONCNEWS: பிரதியமைச்சர் ஹரீஸுக்கு நன்றிகள்!

புதன், 24 ஜனவரி, 2018

பிரதியமைச்சர் ஹரீஸுக்கு நன்றிகள்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிரதித் தலைவருமான ஷபீக் ரஜாப்தீன் தான் வகித்த இரண்டு பதவிகளிலுமிருந்தும் இராஜினாமாச் செய்துள்ளார். மகிழ்ச்சியான செய்தி.
தேசிய அமைப்பாளர் ஒருவர் கிழக்கு மாகாண மக்களை இழிவுபடுத்தி கருத்துப் பதிவிட்டதற்கான பிராயச்சித்தத்தை அவர் தேடிக் கொண்டுள்ளார்.
பேஸ்புக் பதிவு ஒன்றுக்கு பிரதேசவாதம் கலந்த கருத்தை வெளியிட்டதன் மூலம் பொறுப்பு வாய்ந்த ஒருவர், அவர் அங்கம் வகிக்கும் கட்சிக்கும் கலங்கத்தை ஏற்படுத்தியிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் சர்ச்சைகள் எழுந்த போது இது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர் பலருடன் தொடர்பு கொண்டு அவர்களின் நிலைப்பாடு தொடர்பில் அறிய ஆர்வம் கொண்டிருந்தேன். கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பர் உட்பட பலர் எனது தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்கவில்லை. சிலர் தயக்கம் காட்டினர்.
இந்த நிலையில் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எம்.எச்.எம். ஹாரிஸை தொடர்பு கொள்ளக் கூடியதாகவிருந்தது. ஷபீக் ரஜாப்தீனின் கருத்து தொடர்பில் கட்சியின் நிலைப்பாடு, நடவடிக்கை குறித்து நான் தெரிந்து கொள்வதாக அவரிடம் நான் கூறிய போது, இந்த விடயம் தொடர்பில் அவர் தனது மன வேதனையை வெளியிட்டதுடன் கண்டனத்தையும் தெரிவித்தார். அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கட்சித் தலைமையை வலியுறுத்தப் போவதாகத் தெரிவித்தார்.
இந்த நிலையில் குறித்த விடயம் பிரதேசவாதமாக மேலும் வியாபித்து பாரதூரமான பிரச்சினைகள் எழாமல் உடனடியாக நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரை வலியுறுத்தினேன்.
இதனையடுத்து அவரது அனுமதியுடன் இந்த விடயம் குறித்து அவர் தெரிவித்த கருத்துகளையும் அவரது குரலிலேயே வெளியிட்டேன்.
எனது முகநூலில் வெளியிடப்பட்ட பிரதியமைச்சர் எம்.எச்.எம். ஹரீஸ் அவர்களின் கருத்துத் தொடர்பில் பலரும் சந்தேகத்தை வெளியிட்டிருந்தனர். இவை எல்லாம் நடக்காத கதை, இவர் எங்கே சொல்லப் போகிறார்? இவர் சொல்வதனை தலைவர் எங்கே கேட்கப் போகிறார்? இதெல்லாம் படம் காட்டல்கள் என்றெல்லாம் பல பின்னூட்டங்கள், திட்டல்கள்…..
கடந்த காலத்தின் சில கசப்பான அனுபவங்களை எதிர்கொண்ட கிழக்கு முஸ்லிம்கள் விசேடமாக, அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் அவ்வாறான பின்னூட்டங்களை பதிவிட்டிருந்தாலும் அதில் தவறில்லை.
ஆனால், சபீக் ரஜாப்தீனின் விடயத்தில் பிரதியமைச்சர் ஹரீஸின் பங்களிப்பு அளப்பரியது. இன்று (24) காலை அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களைச்சந்தித்து இந்த விவகாரம் தொடர்பில் பிரதியமைச்சர் ஹரிஸ் தனது கண்டனத்தை தெரிவித்ததுடன் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தலைமையை கடுமையாக வலியுறுத்தினார். அதன் பலன் இன்று கிடைத்துள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதே போன்றே, பிரதியமைச்சர் ஹாரிஸ் அவர்கள் ஏனைய விடயங்களிலும் அக்கறை செலுத்தி, கட்சித் தலைமையுடன் பேசித் தீர்வை வழங்குவார் என நினைக்கிறேன்.
ஹரீஸ் அவர்கள் சொன்னால் ஹக்கீம் அவர்கள் செய்வார் என்பதற்கு ஷபீக் ரஜாப்தீனுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை எப்போதும் சாட்சியாக அமையட்டும்.

-சாய்ந்தமருதூரான் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்.

4 கருத்துகள்:

  1. Nijam Nijam ஹரீஸ் mp சொல்லி ரவூப்ஹக்கீம் செய்வார் என்றால் சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றத்தை கொடுக்க சொல்லுங்கலேன்
    கல்முனையில் slmc க்கு சாய்ந்தமருது சவாலாக இருக்காது

    பதிலளிநீக்கு
  2. SLMCயின் தலமையை ஹரிஸ் mp பாரம் எடுத்து கிழக்கு மக்களின் தன்மானம் காக்க முன்வர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. 2004 ம் ஆண்டு பொதுத்தேர்தலில் மூதூர் ஆலையடியில் இடம்பெற்ற கூட்டத்தில் மூதூர் மண்ணிற்கு நிச்சயாமாக சத்தியாமாக தேசியப்பட்டியலை பெற்று தருவேன் என கூறிய கரீஸ் இன்று வரை அதை நடைமுறைப்படுத்த வில்லை.முடிந்தால் இதை தலமையுடன் பேசி மூதூருக்கு தேசியப்பட்டியலை தரச்சொல்லுங்கள்.இதுவரை கட்சிக்காக வ27 சகோதர்ர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் எனது ஊரில்.இதுவரை எந்த ஊரிலும் இப்படி கொல்லப்படவில்லை.உயிரையும் விடவில்லை(பைத்துல்லா தற்கொலை தாக்குதல்) கிண்ணியாவிற்கு ஒரி முகமும் மூதூருக்கு மறு முகமும் காட்டும் உங்கள் தலைவரிடம் சொல்லி் நீங்கள் 2004 இல் கூறிய வாக்குறிதியை நிறைவேற்றுங்கள்! - Azam Mohamed (FB)

    பதிலளிநீக்கு
  4. அப்போ அதையும் தறுதல சுயமாச் சொல்லலயா.? - Ramzan Apm

    பதிலளிநீக்கு