மத்திய வங்கியின் மோசடியுடன் தொடர்புடைய அனைவருக்கும் எதிராக சட்டத்தைப் பயன்படுத்தி, அவர்களுக்கு தண்டனையைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஒத்தாசை புரியுமாறு பிரதமரிடம் தான் வேண்டுகோள் விடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தெரிவித்தார்.
தன்னை பலம்மிக்கவனாக மாற்றுவதை விடுத்து, எந்தவொரு வேளையிலும் தன்னை சிரமத்திற்குள்ளாக்க வேண்டாம் எனவும் ஜனாதிபதி, பிரமர் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அனைவரிடமும் கேட்டுக் கொண்டார்.
கண்டியில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போதே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.
2014 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த அரசிலிருந்து தான் விலகும்போது, அன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தன்னைக் குற்றம் சுமத்தியதாகவும், இன்று ஐக்கிய தேசியக் கட்சி தன்னைக் குற்றம் சுமத்துகின்றது எனவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, தான் ஒருபோதும் எந்தவொரு கட்சிக்கும் துரோகம் இழைக்கவில்லை எனவும், தான் எப்போதும் இலஞ்சத்திற்கும் ஊழலிற்கும் எதிராகவே செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.
“இன்று மத்திய வங்கியின் அறிக்கை தொடர்பில் மேடைகளில் வாயாரக் கிழிக்கும் முன்னாள் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டபோது, பாராளுமன்றத்திற்கு வந்து அதற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. ரவி கருணாநாயக்க பாராளுமன்றை விட்டு வெளியேறியவுடனே தொலைபேசியில் தொடர்புகொண்டு அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தேன். அதுதொடர்பில் எனக்கு நன்கு தெரியும்”
தேர்தலுக்கு என்றே வடிவமைக்கப்பட்ட பேச்சாகவும் இருக்கக் கூடும்.. இதுதான் அரசியல்....
பதிலளிநீக்கு